
Varalakshmi Pooja Kadha
ஸ்ரீ வரலட்சுமி விரத பூஜை விரத மகிமை நாம் அனைவரும் தேடும் செல்வத்திற்கு அதிபதியாக லட்சுமியை வணங்குவது நமக்கு அனைத்து நன்மையையும் பெற்றுத் தரும் அதிலும் வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி அவளது விரத தினத்தில் வழிபடுவது சிறப்பு இவ்விரதத்தை சிரத்தையுடனும் செய்து தானும் பலனடைந்த தன்னை சார்ந்தவர்களையும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க செய்து பயனடைய செய்த சியாமபாலா என்னும் பெண்ணின் சரித்திரம் இது
பத்ரம் என்ற மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன் இவனது மனைவியின் பெயர் சூர சந்திரிகா இந்த தம்பதியர் அவர்களது செல்ல மகளான சியாம பாலாவை சக்கரவர்த்தியான மாறாதரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள் நாட்கள் சென்று கொண்டிருந்தன ஒரு நாள் செந்தாமரை செல்வியான லக்ஷ்மி தேவி வயதான சுமங்கலி வேடத்தில் சூரசந்திரிக்காவிற்கு அருளும் நோக்குடன் அவளது அரண்மனைக்குள் பிரவேசித்தால் அவளிடம் அன்போடு வரலட்சுமி விரதத்தை பற்றி விளக்கமாக கூறி அதை கடைபிடிக்கும்படி சொன்னாள் ஆனால் அரசியான சூரச சந்திரிகாவோ லட்சுமி தேவியை யாரோ யாசகம் கேட்க வந்தவள் என்று நினைத்து மரியாதை இல்லாமல் நடத்தி வெளியே அனுப்பி விட்டால் அச்சமயம் தன் தாய் வீட்டுக்கு வந்த சியாம பாலா வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஒரு மூதாட்டி வெளியே வருவதை பார்த்தால் மூதாட்டியை அன்புடன் உபசரித்து அவள் வந்த காரணத்தை அறிந்து அவள் கூறிய அந்த வரலட்சுமி விரத மகிமையை விரிவாக கேட்டு உபதேசமும் பெற்று பக்தியுடன் விரதத்தை கடைப்பிடித்தால் விரத மகிமையால் சிறந்த செல்வம் பெற்றாள்
இதேநேரம் அவள் பெற்றோர்கள் லட்சுமி தேவியை மதிக்காத காரணத்தால் எல்லாவற்றையும் இழந்து ஏழைகளானார்கள் தன் பெற்றோர் ஏழ்மையில் அவதிப்படுவதை அறிந்த சாம பாலா ஒரு குடம் நிறைய தங்கு காசுகளை அனுப்பி வைத்தாள் ஆனால் அது அவர்கள் கைபட்டதும் அவர்களது கர்ம வினை யின் காரணத்தால் கரி துண்டுகளாக ஆகிவிட்டது இதை அறிந்த சிரமபாலா தன் தந்தையின் அரண்மனையில் திரும்பவும் லக்ஷ்மி நித்தியவாசம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் தன் தாயை அழைத்து அவளுக்கு வரலட்சுமி விரத பூஜையின் மேன்மையைக் கூறி அந்த விரதத்தை செய்யும் படி கூறினால், அவளும் மகள் சொன்னபடியே வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து பூஜை செய்து அழிந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்று சுகவாழ்வு வாழ்ந்தால்
கதை அதேபோல் முன்பொரு சமயம் தேவர்கள் வசிக்கும் கைலாயத்தில் பார்வதியும் பரமசிவனம் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர் விளையாட்டு முடிவுக்கு வந்தது அதில் யார் ஜெயித்தார்கள் என்று வாக்குவாதம் இருவருக்கும் ஆரம்பமானது அதை முடிவுக்கு கொண்டு வர சித்திரமேலி என்கிற கந்தர்வனை மத்தியஸ்தம் செய்ய அழைத்தனர் ஆனால் அவனும் சிவனின் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக சிவபிரான் தான் ஜெயிப்பார் என்று கூற பார்வதி தேவி கட்டுக்கடங்காத சினம் கொண்டு நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி ஒளி இழந்து போவாய் என்று சபித்தாள் இதற்கு பரமசிவன் ஒருத்தி தேவி இந்த சித்திர நேம் மிகவும் நல்லவன் என் மீது கொண்டுள்ள பக்தியால் இவ்வாறு செய்துவிட்டான் நீ அவனை மன்னித்து அவனது சாபத்தை அகற்றுவாயாக என்று கேட்டுக் கொண்டார் அதற்கு மனம் இறங்கிய பார்வதி தேவி அழகிய தடாக தீர்த்தத்தில் தேவ கன்னிகைகள் புண்ணியமான ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை அனுப்புவதை எப்பொழுது அவன் காண்கிறானோ அப்பொழுது அவன் சாபம் நீங்கி பூர்வ ரூபத்தை அடைவான் என்று கூறி அருளினால்
சாப வசத்தால் குஷ்டரோகியான சித்திர தேவி தடாத கரையை அடைந்து தேவ கன்னிகைகளை எதிர்பார்த்து வாசம் செய்யலானான் ஆவணி மாதம் சுக்லபாக்கம் வெள்ளிக்கிழமை அன்று தேவ கன்னிகைகள் தடாத தீர்த்தத்தை அடைந்து அங்கு பூஜை செய்ய தொடங்கினார்கள் சித்திரை நேமி அவர்களிடம் சென்று தாங்கள் செய்வது வரலட்சுமி விரத பூஜை தானே என்று கேட்க அவர்கள் ஆமாம் எதற்காக கேட்கிறாய் என்றனர் அதற்கு சித்திரை வரலட்சுமி விரதத்தை எப்பொழுது தேவ கன்னிகைகள் அனுஷ்டிப்பதை பார்க்கிறேனோ அப்பொழுது தான் சாபம் விமோசனம் அடைவேன் என்று பார்வதி தேவி அருளி இருக்கிறார் ஆகையால் தான் கேட்டேன் என்றான் தேவகன்னிகைகள் ஆமாம் நாங்கள் செய்வது வரலட்சுமி பூஜை தான் மேலும் இதை அனுப்பித்துக்கும் முறையை விளக்கமாக கூறுகிறோம் கேள் என்று கூறினார்கள் இந்த விரதத்தை பிராமண மாதம் அதாவது ஆடி அல்லது ஆவணி மாத சுற்றுலா பக்ஷ வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும் இந்த விரதத்தை செய்யும் முன் வீட்டை முதலில் சுத்தம் செய்து கோலங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்க வேண்டும் வியாழன் அன்று சந்தியில் ஈசானிய மூலையில் சுவற்றில் வெள்ளை அடித்து அம்மன் உருவத்தை வரைய வேண்டும் வரையத் தெரியாதவர்கள் படத்தை வாங்கி பூஜை செய்யலாம் அம்மன் திரு உருவத்தின் முன் அழகாய் கோலமிட்டு அதன் மேல் நுனி வாழை இலை அல்லது காம்பாலத்தில் அரிசியை பரப்பி அதில் அஷ்டதல பத்மம் அமைக்க வேண்டும் சுத்தமான தீர்த்தத்தால் நிரம்பிய பூர்ண கலசத்தின் மேல் தேங்காய் வைத்து அதன் மேல் அவரவர் சக்திக்கேற்ப செம்பு தங்கம் வெள்ளி மஞ்சள், லட்சுமியின் முகத்தை தமிழ் செய்து வஸ்திரம் பூ மாலை மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கவும்
சர்வாலங்கார பூஷிதையான வரலட்சுமி பக்தி சத்தையுடன் கரங்களில் ஏந்தி நிலை வாயிற் படிக்கு அருகே எடுத்துச் சென்று மங்களா ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து இதற்கென விசேஷமாக அமைக்கப்பட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து தூபதி நைவேத்தியம் கற்பூர ஆரத்தியுடன் கூடிய சமஸ்த உபச்சாரங்களுடன் உபசரிக்க வேண்டும்
மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ஒன்பது முடிச்சுகள் கொண்ட தோரணத்தை கலசத்தின் மீது சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தார்கள் சித்ரா நேமி தேவ கன்னிகைகள் செய்த இந்த பூஜையை அவர்களுடன் கூடி தானும் அனுஷத்துக்கு விரதத்தின் முடிவில் தோரத்தை கட்டிக்கொண்டு சுகாசினிகளுக்கு வாயணம் அளித்தான் சித்ரா நேமி இந்த பூஜையை சத்தையுடனும் பக்தியுடனும் கண்டு அனுஷ்டித்த பலனால் அவனுடைய குஷ்டரோகம் மறைந்து பழைய பொலிவு பெற்றான்
பிறகு கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை வணங்கி ஆசை பெற்றான் அப்பொழுது பரமசிவன் இன்று முதல் நீ இந்த கைலாயத்தில் சகல கோவங்களையும் அனுபவிப்பாய் பிறகு இந்த விரதத்தின் மகிமையால் மோக்ஷத்தை பெறுவாய் என அருளினார்
மேலும் இவ்வாறே பூலோகத்தில் சவுராஷ்டிர தேசத்தில் குண்டி நம் என்ற நகரத்தில் சாருமதி என்ற பெண் இந்த வரலட்சுமி விரதத்தை உபதேசிக்கப்பட்ட சகல சௌபாக்கியங்களையும் பெற்றால்
அதிலிருந்து பூலோகத்தில் இப்போதை அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கேட்பவர்கள் அனைவருமே வரலட்சுமியின் அருளால் தன தானிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுவார் ஆகவே பெண்மணிகள் எல்லோரும் இந்த விரதத்தை கடைப்பிடித்து சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்